2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

‘இந்தியாவே இல்லைனு எழுதிக்கோ’

Editorial   / 2020 மே 24 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ.விருமாண்டி இயக்கியுள்ள திரைப்படம் – ‘க/பெ. ரணசிங்கம்’ . ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவது போன்ற காட்சிகளே டீசரில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

ஆதார் அட்டை விமர்சனம் மற்றும் “ரேஷன் அட்டை கணக்கில் பெயரை எடுத்துவிடுவேன்” என மிரட்டும் அதிகாரியிடம், "நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்கோ போ" எனச் சீறும் ஐஸ்வர்யாவின் நடிப்பு என, மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டுகிறது க/பெ.ரணசிங்கம் டீசர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .