2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

இந்த வாரம் வெளியேறுவது யார்? கஸ்தூரிக்கு வந்த சோதனை

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் தர்ஷன், சாண்டி, சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் உள்ளனர். 

இவர்களில் தர்ஷன், சாண்டி ஆகிய இருவருக்கும் அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளதால் இருவரும் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இல்லை. ஆனால் நால்வரில் கஸ்தூரி மிகக்குறைந்த சதவீத வாக்குகளே பெற்றுள்ளார்.

பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த கஸ்தூரியிடம் பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் இன்று வரை அவர் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை என்பது மட்டுமின்றி ஒருசில பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்தார். 

அதுமட்டுமின்றி சக போட்டியாளர்கள் யாருக்கும் கஸ்தூரியை பிடிக்கவில்லை. முதல் நாளில் இருந்தே கஸ்தூரியை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். எனவே முதல் நாளில் இருந்து இன்று வரை அவர் பிக்பாஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

மேலும் சம்பந்தம் இல்லாமல் பேசுவது, வனிதாவுடன் மோதல், கவினை சீண்டிவிடுவது, டாஸ்க்கில் சொதப்புவது ஆகியவை காரணமாக அவர் இந்த நிகழ்ச்சிக்கு லாயிக்கில்லை என்றே பார்வையாளர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 

இதுவரை ஒளிபரப்பான மூன்று பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வைல்ட் கார்ட் எண்ட்ரியான ஒருவர் ஓரிரு வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது அனேகமாக கஸ்தூரியாகத்தான் இருக்கும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X