2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இறுதிக்கட்டத்தில் ’கோப்ரா’

J.A. George   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் 'கோப்ரா' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் இன்று(23) முதல் தொடங்கவுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'கோப்ரா' திரைப்படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்து வருகிறார்.

கொரோனா குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் ரஷ்யாவிலேயே படப்பிடிப்பை நடத்த 'கோப்ரா' படக்குழு திட்டமிட்டது.

ரஷ்யாவில் படமாக்க வேண்டிய காட்சிகளுடன், திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'கோப்ரா' படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் ஏப்ரலில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .