2020 ஜூலை 11, சனிக்கிழமை

’என்.ஜி.கேயில் ஏன் நடித்தேன்?’

Editorial   / 2019 ஜூன் 06 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே திரைப்படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், செல்வராகவன் இயக்கத்தில் நடித்தால், தன்னுடைய நடிப்புத் திறமை மேம்படும் என்று கேள்விப்பட்டதாலும் இது சூர்யா சார் திரைப்படம் என்பதாலும், இதில் தனது கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருந்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

“செல்வராகவன் திரைப்படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கார்த்தியும் சூர்யாவும் வித்தியாசமானவர்கள். இரண்டு பேருமே கடின உழைப்பாளிகள், தலைக்கனம் இல்லாதவர்கள். செய்யும் வேலையை இஷ்டப்பட்டுச் செய்பவர்கள்.

“எனக்கு, தமிழை விட தெலுங்கு மொழி நன்றாகத் தெரியும். நான் தெலுங்கில் சரளமாகப் பேசுவேன். இந்நிலையில், தமிழ் வசனத்தை மனப்பாடம் செய்து பேசுவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதே சமயம், அந்தச் சவாலை நான் விரும்பி ஏற்று நடித்தேன்.

“நான் பொக்கெட் மணிக்காகத்தான் முதலில் நடிக்கத் தொடங்கினேன். கமெராவுக்கு முன் நின்று நடிப்பது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்தே நடிகையாவது என்று முடிவு செய்தேன்” என்றும், ரகுல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் சேர்ந்து 'மன்மதுடு 2' திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .