2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கபாலி இசை வெளியீடு எப்போது?

George   / 2016 மே 24 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெறி திரைப்பட வெற்றியால் தெறி மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளரான கலைபுலி எஸ்.தாணு.

அவரது அடுத்த தயாரிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படத்தை ஜூலை முதலாம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் கபாலி திரைப்படத்தின் இசை, ஜூன் முதல் வாரத்தில் நிச்சயமாக வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிச்சயமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த தீர்மானித்துள்ளதுடன் ஜூன் 10ஆம் திகதிக்குள் எப்படியும் வெளியிட்டுவிடுவோம் என்றும் தாணு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கபாலி திரைப்படத்துக்கு சந்தோஷ் நராயணன் இசையமைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .