Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் காரணமாக சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் நடிகர் புளோரன்ட் பெரேராவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவர் விண், விஜய் மற்றும் கலைஞர் டிவிகளில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். புதிய கீதை படத்தில் நடிகராக அறிமுகமான இவர், பிரபு சாலமன் இயக்கிய 'கயல்' படத்தின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து தனுஷின் தொடரி, வேலையில்லா பட்டதாரி 2, ராமின் தரமணி, தர்மதுரை, எங்கிட்ட மோதாதே உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
சென்னை தி.நகரில் வசித்து வந்த இவர், 'குள்ளநரிகூட்டம்' பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்க இருந்தார். இதன் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடிந்து வருகிறது.
இதன் ஷூட்டிங்கிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன் செல்ல இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அவர் உடல்நிலை திடீரென மோசமானது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
45 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago