2020 ஜூன் 03, புதன்கிழமை

கவர்ச்சிக்கு முழுக்கு

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பையா படத்தில் மழையில் நனைந்தபடி கவர்ச்சி நடனமாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகை தமன்னா, அதன்பிறகு பல படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார்.

சமீபகாலமாக பேய் படங்களில் நடித்து வரும் தமன்னா, சில படங்களில் ஸ்பெசல் பாடல்களிலும் டூ-பீஸ் உடைகளில் நடனமாடியிருந்தார்.

இந்த நிலையில், சிரஞ்சீவியின் காதலியாக அவர் நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் அவரது நடிப்புக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

அதோடு சில திரையுலக நண்பர்கள் கவர்ச்சியை குறைத்து விட்டு பர்பாமென்ஸ் ரீதியிலான கதைகளில் நடிக்குமாறும் அவருக்கு அறிவுரை கொடுத்துள்ளார்களாம்.

அதையடுத்து இனிமேல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களுக்குகே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக கூறிவருகிறார் தமன்னா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X