2021 மார்ச் 06, சனிக்கிழமை

கிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா?

Editorial   / 2021 ஜனவரி 20 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை வரலட்சுமி சரத்குமார் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தையும் கடந்து தனக்கென தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பதித்துள்ளார் நடிகை வரலட்சுமி. 

முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர்.

இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார். இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. 

அதன் பின்னர் விஷாலுடன் சண்டைக்கோழி, விஜய்யுடன் சர்கார் ஆகிய படங்களில் வில்லியாக நடித்து அனைவரையும் எதிர்பார்ப்பையும் வேற லெவலுக்கு பூர்த்தி செய்தார். இது அவருக்கு பெயரையும் பெற்றுத்தந்தது. 
 
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக பிரபல நடிகரும், பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே சரத்குமார் - ராதிகாவின் மகள் ரயன் கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுனை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், வரலட்சுமி சரத்குமாரும் கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து வரலட்சுமி தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .