Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய குடியுரிமை சீர்திருத்த மசோதாவினால் அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் மோதிக் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அண்மையில், அவர் பதிவு செய்த ஒரு டுவிட்டில், ‘பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை எச்சு.ராஜா என குறிப்பிட்டதோடு, எச். ராஜா ஒரு பைத்தியக்காரர் என்று விமர்சனம் செய்திருந்தார்.
குஷ்புவின் இந்த டுவீட்டிற்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நடிகையும் நடன இயக்குநரும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், குஷ்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில் குஷ்புவை ‘கூ.... என குறிப்பிட்டு ’பொய்யை தவிர உங்கள் வாழ்க்கையில் வேறு என்ன இருக்கிறது? நீங்கள் சொன்ன பொய்களின் அனைத்து பட்டியலும் என்னிடம் இருக்கிறது. நீங்கள் வெறுக்கின்றீர்கள் என்றும், உங்களைப் போன்றவர்களுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் புகலிடம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே இதே பிரச்சனை குறித்து நடிகர் சித்தார்த்துடன் மோதிய காயத்ரி ராகுராம் தற்போது குஷ்புவிடம் மோதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
32 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025