2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

சம்பளத்தை குறைத்த நடிகை

Editorial   / 2020 ஜூலை 08 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகுல் ப்ரீத்தி சிங், கில்லி என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் நடித்து விட்டு யுவன் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

 தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே படங்களில் நடித்தார்.

தமிழில் குறைவான படங்களில் நடித்தபோதும், தெலுங்கில் பிசியான நடிகை. தற்போது இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். 

தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், கமல் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 மாதத்திற்கும் மேலாக சினிமா உலகம் முடங்கிக் கிடக்கிறது. 

முன்னணி நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைத்தால் மட்டுமே சினிமா மீண்டு வர முடியும் என்ற கருத்து பரவி வருகிறது. 

நடிகை டாப்ஸியும், கீர்த்தி சுரேசும் சம்பள குறைப்பை ஏற்கெனவே அறிவித்து விட்டார்கள். 

இந்த நிலையில் நடிகை ரகுல் பிரீத்தி சிங்கும் இனி நடிக்கும் படங்களில் சம்பளத்தை 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை குறைத்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--