Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
J.A. George / 2020 நவம்பர் 30 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறிய சம்யுக்தாவை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி வரவேற்று கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நேற்றைய எபிசோடில் சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டில் தான் ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக அனுபவித்ததாகவும் இங்கு எனக்கு புதிய உறவுகள் கிடைத்தது என்றும் இது ஒரு நல்ல அனுபவமாக எனக்கு இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா தனது வீட்டிற்கு சென்றபோது அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற குடும்பத்தினர், சம்யுக்தாவின் வருகையை கேக் வெட்டி கொண்டாடினர்.
மேலும் எட்டு வாரங்களுக்கு பின் தனது குழந்தையுடனும், குடும்பத்தினர்களுடனும் சம்யுக்தா மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago