2021 மார்ச் 06, சனிக்கிழமை

சர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு

Editorial   / 2021 ஜனவரி 18 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அனிகா சுரேந்திரன். தல அஜித்தின் படங்களில் அவருக்கு மகளாக நடித்து பெயர் பெற்றார். 

அஜீத்துடன் அனுஷ்கா நடித்த என்னை அறிந்தால் விஸ்வாசம் போன்ற படங்கள் செம வெற்றியைப் பெற்றது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து அனிகா சுரேந்திரன் தற்போது 16 வயதை எட்டியுள்ளார்.

தினமும் சமூகவலைதளத்தில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட அவர்  விரைவில் ஹீரோயினாக களமிறங்க உள்ளாராம்.  

ஆனால் சமீபத்தில் நடிகை அனிகா சுரேந்திரன் மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டுகுத்தாட்டம் போட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகி காட்டு தீ போல் வைரலானது.

ஆனால் அதில் உண்மையில் அனிகா சுரேந்திரன் இல்லையாம். யாரோ ஒருவர் அனிகாவின் முகத்தை மார்பிங் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனையும் உடனடியாக காவல்துறையினர் கண்டறிந்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் அந்த வீடியோ குறித்து பல சர்ச்சைகள் எழுந்ததால் கையிலிருந்த சில பட வாய்ப்புகள் கை விட்டு சென்றதால் வருத்தமடைந்த அனிகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த ஆபாச வீடியோ தன்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாகவும் அந்த வீடியோவை யாரேனும் வேறு யாருக்காவது பகிர்ந்தால் உடனடியாக அந்த பதிவை ரிப்போர்ட் செய்யுமாறும் கேட்டுள்ளார். 

ஹீரோயின் ஆசையில் மண்ணை அள்ளி போட்ட ரசிகை மீது கோபத்தில் இருக்கிறாராம் அனிகா சுரேந்திரன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .