2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

ஜெனிலியாவின் தானம்

Editorial   / 2020 ஜூலை 02 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஜெனிலியா, பின்னர் 'சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம்' உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களிலும் பல தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தார்.

ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பதை விட்டு விலகியுள்ளார். இந்த நிலையில், ஜெனிலியாவும், அவரது கணவர் ரித்தேஷும் உடல் உறுப்பு தானப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

“நானும் ரித்தேஷும் இது குறித்து நீண்ட காலமாகவே யோசித்து வந்தோம், ஆனால், அதை செய்ய முடியாமலே இருந்தது. தற்போது, எங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய வாக்குறுதி கொடுத்துவிட்டோம்.

அடுத்தவருக்கு நாம் தரும் மிகப் பெரும் பரிசு, 'வாழ்க்கைப் பரிசு' தான். உயிர்களைக் காப்பாற்ற இது போல நீங்களும் உங்களது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்,” என்று தெரிவித்துள்ளர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--