2020 பெப்ரவரி 22, சனிக்கிழமை

டென்ஷன் ஆன ஹீரோயின்

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், சூரியநகரம் உட்பட சில படங்களில் நடித்திருந்த, மலையாள நடிகை மீரா நந்தனை ஞாபகமிருக்கிறதா? .

மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், பின்னர் சீரியலில் நடித்தார். இப்போது அதையும் விட்டுவிட்டு, டுபாயில் ஒளிபரப்பாகும் மலையாள வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றி வருகிறார். இதற்காக அங்கு வசித்து வருகிறார்.

அண்மையில், இவர் குறைந்த அளவு ஆடை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போட்டோஸ் வைரலானது. இதற்கு ரசிகர்கள் சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள மீரா நந்தன், நான் குட்டையாக உடை அணிந்திருப்பதாக யாரும் குறை கூற முடியாது. என் ஆடையின் அளவைக் கணக்கிட யாருக்கும் உரிமை இல்லை. அப்படியொரு உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை. நான் மற்றவர்களை கவர்வதற்காக வாழவில்லை என்று கடுப்பாகத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .