2021 மார்ச் 01, திங்கட்கிழமை

தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகை

J.A. George   / 2021 ஜனவரி 12 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகை என்ற பெருமையை ரஜினி திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தட்டிக் கொண்டு சென்றுள்ளார்

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்பட பலர் நடித்த ’ஹம்’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷிரோட்கர்.

இவர் கடந்த 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் தற்போது இவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் டுபாயில் உள்ளார்.

இந்த நிலையில் டுபாயில் தானும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும், அதற்காக டுபாய் அரசுக்கு நன்றி என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதுவரை வெளிவந்த செய்திகளின்படி வேறு எந்த இந்திய நடிகையும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரியவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .