2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

தமன்னாவின் அறிவுரை

J.A. George   / 2021 ஜனவரி 26 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா அறிமுகமானது முதலே ஒரேமாதிரியான உடல் கட்டமைப்போடு இருந்துவந்தார்.

இந்நிலையில் கொரானாவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்ட தமன்னா, கொரானாவிலிருந்து மீண்டு வந்த பின்னர், உடல் பூசிய நிலையில் சில படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.

இதனைடுத்து, தன் உடலை மெருகேற்ற அவர், தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அப்படி உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோவை ரசிகர்களுக்கு தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அறிவுரை சிலவற்றை கூறியுள்ளார்.

அதில் , “நீங்கள் உச்சபட்ச பயிற்சி என்ற பெயரில் உடலை வருத்தவேண்டாம். 2 மாதம் சாதாரண பயிற்சியை மேற்கொண்டாலே போதும், பழைய ஆரோக்கியத்தை பெறலாம். தினமும் பயிற்சி செய்யுங்கள், என்னைபோல் பழைய நிலைக்கு திரும்பலாம்” என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .