2020 ஜூலை 15, புதன்கிழமை

நிறம் தந்த அனுபவம்

Editorial   / 2020 ஜூன் 05 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறத்தின் காரணமாகத் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

நிறவெறி காரணமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் கொடுமைகள் இன்று உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கும், இனவெறிக்கும் எதிராகப் பொதுமக்களும், பிற பிரபலங்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் தனது பதிவில், “எனக்கு 14 வயது இருக்கும்போது, எனது நெருக்கமான நண்பர் ஒருவர் ஒரு விடயத்தை என்னிடம் கூறினார்.

டீ குடித்தால் அவர் கறுப்பாக மாறிவிடுவார் என்ற ஒரு வித்தியாசமான நம்பிக்கையில் அவரது அம்மா எப்போதும் அவரை டீ குடிக்க அவரை அனுமதிப்பதில்லையாம். அவர் ஒருமுறை டீ வேண்டும் என்று கேட்டதற்கு, 'நீ டீ குடித்தால், அவளை (மாளவிகா) போல கறுப்பாக மாறி விடுவாய்' என கூறினார்.

நீங்கள் நல்ல, அன்பான நபராக இருப்பதுதான் உண்மையான அழகு, அது தோலின் நிறத்தைப் பொறுத்தது இல்லை” என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X