2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

புதிய ஆரம்பம்

Editorial   / 2020 ஜூலை 02 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் சீரான நடிகைகளுள் ஒருவர் வரலக்ஷ்மி சரத்குமார். போடா போடி படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும், 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தளபதி விஜய்யுடன் ‘சர்க்கார் ‘திரைப்படத்திலும், தனுஷுடன் ‘மாரி 2’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இறுதியாக ‘வெல்வெட் நகரம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

வரலக்ஷ்மி நடிக்கும் திரைப்படங்களின் பணிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. லொக்டவுன் காரணமாக கிடைத்துள்ள இந்த நேரத்தை வரலட்சுமி தனது வீட்டிலேயே செலவழித்து வருகிறார்.

சினிமா சார்ந்த பணிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பேக்கரி நிறுத்த ஆரம்பித்தார். “லைஃப் ஆஃப் பை” என பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மூலமாக ஏற்கெனவே வரலட்சுமி விற்பனையை ஆரம்பித்துள்ளார்.

சிறு வயது முதலே பேக்கிங் செய்வதில் ஆர்வம் காட்டி வந்த அவர் தற்போது ஒரு தொழிலாகவும் தொடங்கிவிட்டார்.

இதுகுறித்து அவரது தெரிவிக்கையில், “சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு நான் ஒரு சிறிய பேக்கிங் கம்பெனியை ஆரம்பித்தேன். இது ஒரு பொழுதுபோக்கு விஷயமாகத்தான் செய்தேன். தற்போது அது ஒரு சிறிய தொழிலாள வளர்ந்து இருக்கிறது. தற்போது வரை நான் எதிர்பார்க்காத வகையில் 100 ஓடர்களை முடித்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து ஓடர் கொடுத்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--