2020 ஜூன் 04, வியாழக்கிழமை

பாண்டிராஜ் இயக்கத்தில் ’மீண்டும் சிவா’

Editorial   / 2019 மார்ச் 10 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம், நடிகர் சிவகார்த்திகேயனும் இயக்குநர் பாண்டிராஜும் மீண்டும் இணைகின்றனர்.

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயனை, தனது “மெரினா” திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாண்டிராஜ், இதையடுத்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படத்திலும், சிவாகார்த்திகேயனை நடிக்கவைத்தார். அதன் பின்னர், இருவரும் இணைந்து, திரைப்படம் பண்ணவில்லை.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது அடுத்தத் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக, பாண்டிராஜ் அறிவித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.

படம் தற்போது ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. சிவகார்த்திகேயனுடன் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இது சன் பிக்சர்ஸ் படம் என்பதால், ஒவ்வொரு அறிவிப்பையும் அவர்கள் தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X