Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினியின் நடிப்பில் உருவாகிவரும் ‘பேட்ட’ படத்தை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் வெளியிடும் உரிமையையும் பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்ரேஷன் பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. வரும் பொங்கலன்று வெளிவரவிருக்கும் இப்படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற மாபெரும் நட்சத்திரங்கள் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர்.

படத்தின் அனைத்து பாடல்களும் 9ஆம் திகதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12ஆம் திகதி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பிறந்தநாள் ட்ரீட்டாக காலை வெளியானது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், பேட்ட படத்தை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான "மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்" பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago