Editorial / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பட்டதாரி படம் மூலம் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த அதிதி மேனன். அதைத்தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் ஜோடியாக களவாணி மாப்பிள்ளை என்கிற படத்தில் நடித்தார்.
ஏற்கனவே நெடுநல்வாடை திரைப்படத்தின் இயக்குநர் மீது சர்ச்சை குற்றச்சாட்டு சுமத்தியது, தனது காதல் கணவர் நடிகர் அபி சரவணன் மீது புகார் கூறியது என தொடர்ந்து பரபரப்பில் இருந்தாலும் அதிதி மேனனுக்கு தமிழில் படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இந்த நிலையில் அவரது சொந்த மொழியான மலையாளத்தில் அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல மோகன்லாலுக்கு ஜோடியாக சித்திக் டைரக்ஷனில் பிக் பிரதர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் அதிதி மேனன்.
இந்தப்படத்தில் இருந்து மலையாளத்தில் தனது பெயரை மிர்னா என மாற்றி வைத்துக் கொண்டு நடித்து வருகிறாராம் அதிதி மேனன்.
டுவிட்டரில் இவரது பெயரில் இப்போதே ரசிகர்கள் பேன்ஸ் கிளப் ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago