2020 ஜூலை 15, புதன்கிழமை

மீண்டும் பழைய ஜோடி

Editorial   / 2020 ஜூன் 05 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய நடிகர் சங்க நலநிதிக்காக பிரபுதேவா இயக்கத்தில் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ என் திரைப்படத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டனர்.

2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு நடிகர் விஷால் ஒத்துழைப்பு இன்மையால், சில நாட்களிலேயே கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளர் பொறுப்புக்கு வரவிரும்பும் ஐசரி கணேஷ் திரைப்படத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படத்தை மீண்டும் இயக்க பிரபுதேவா சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும், விஷாலுக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும், நாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா ஏற்கெனவே பிரபுதேவா இயக்கிய ‘வில்லு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இருவரும் சில ஆண்டுகள் காதலித்தனர். திருமணம் வரை சென்ற அவர்களது காதல் இடையில் முறிந்தது.

தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை நயன் காதலித்து வருகிறார். தொழில் விடயத்தில் தனிப்பட்ட வாழ்க்கை, விருப்பு, வெறுப்புகளை நயன்தாரா முன்னிலைப்படுத்துவது இல்லை. தனது முன்னாள் காதலர் சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தில் அவர் சேர்ந்து நடித்திருந்தார்.

நடிகர் சங்க நலநிதிக்காக தயாரிக்கப்படும் திரைப்படம் என்பதால் நயன்தாராவுக்கு, பிரபுதேவா இயக்கத்தில் நடிப்பதில் தயக்கம் இருக்காது என்கிறது, நயன்தாரா வட்டார தகவல்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X