2020 ஜூன் 04, வியாழக்கிழமை

மணிரத்னம் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி உள்ளிட்டோரை வைத்து செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம்.  இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக அவர் நெஞ்சுவலியால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராவணன் படத்தின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த  2015ஆம் ஆண்டில்  ஓ காதல் கண்மணி படத்தின் வெளியீட்டின் பின்னர் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டபோது  டெல்லியில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X