2020 ஜூன் 01, திங்கட்கிழமை

மதுமிதாவை அடுத்து வெளியேறுகின்றாரா கஸ்தூரி?

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த கஸ்தூரிக்கும் கவினுக்கும் ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.

கஸ்தூரியை ‘காக்கா’ என கவின் கூற, கவினின் நான்கு பெண்கள் விடயத்தை மீண்டும் மீண்டும் கஸ்தூரி கிளற, இருவரும் அவ்வப்போது மோதிக் கொண்டனர்.

இதுகுறித்து கமல்ஹாசன் விசாரித்தபோது கஸ்தூரிக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் என்றும், பழைய பிரச்சினைகளை அவர் மீண்டும் மீண்டும் கிளறுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கவினுக்கும் கஸ்தூரிக்கும் நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், கவின் தன்னை தீய நோக்கத்துடன் தொட்டதாகவும் கஸ்தூரி பிக்பாஸிடம் புகார் கூறியதாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.

அத்துடன், கஸ்தூரி கோபத்தில் கமராவை உடைத்து விட்டதாகவும் இதனால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக ஒரு சில மணிநேரங்கள் பிக்பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் மிக வேகமாக பரவி வருகிறது. 

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

ஏற்கெனவே, மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது கஸ்தூரியும் கமராவை உடைத்தது பிக்பாஸ் விதிமுறை மீறல் என்பதால் அவரும் வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X