2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

’மீண்டும் இணையும் சிவா - நயன்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'சீமராஜா' படத்தை தொடர்ந்து, தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு இன்று (06) மாலை வெளியிட்டப்படவுள்ளதாக படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து  வருகிறார்.

இந்நிலையில், தற்போது ராஜேஷ் இயக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் இந்த படத்திற்கு  ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு  உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை  வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .