Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் கவின் - அபிராமி காதல், கவின் - சாக்சி, லொஸ்லியா காதல், முகின் - அபிராமி காதல் என ஒருசில காதல்கள் தோன்றி கானல்நீர் போல் மறைந்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் கவின் - லொஸ்லியா காதல் மலர்ந்துள்ளது போல் தெரிகிறது.
நேற்றே கவின் அடித்த கமெண்டுக்கு லொஸ்லியா வெட்கப்பட்ட நிலையில் இன்று லொஸ்லியாவும் சேரனும் கவினை மாறி மாறி புகழ்வதை பார்க்கும்போது கவின் மீது லொஸ்லியாவுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாகவும், அது விரைவில் காதலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
கவினை எனக்கு முன்னாடியே பிடிக்கும், அது இப்ப ரொம்ப பிடிக்கும் இது கவினுக்கே தெரியும் என்று கூறும் லாஸ்லியா, தனக்கு பக்கத்தில் இருப்பவர்களை தட்டிக்கொடுத்து தான் வெளியே போனாலும் பரவாயில்லை என்ற மைண்ட்செட் எத்தனை பேருக்கு இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை, அந்த எண்ணம் கவினுக்கு இருப்பதாக கூறுகிறார்.
அதேபோல் கவின் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்றும் நண்பர்களை சம்பாதித்துவிட்டால் விரைவில் முன்னேறிவிடலாம் என்றும் தெரியாமல் ஒருசில தவறுகள் கவின் செய்திருந்தாலும் கவின் நல்லவன் தான், கெட்டவன் கிடையாது என்றும் சேரன் கூறுகிறார்.
மொத்தத்தில் அப்பாவும் மகளும் கவினுக்கு ஐஸ் வைப்பது எங்கு சென்று முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#Day60 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/qOuub1RzA9
— Vijay Television (@vijaytelevision) August 22, 2019
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago