2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

ரஜினி 168 பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

Editorial   / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படமான 'தலைவர் 168'  இன் பூஜை ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று மாலையே சென்னையில் நடைபெற்றது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

இந்த பூஜையில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் மகளாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் குஷ்பு, மீனா ஆகிய இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு  வெளியானது. 

அதைத் தொடர்ந்து இப்படத்தின் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. இருவரில் மீனா ரஜினியின் ஜோடி எனவும், குஷ்பு பிரகாஷ்ராஜ் ஜோடி எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .