2020 ஜூன் 04, வியாழக்கிழமை

ரெஜினாவின் புதுக்கோலம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக அமையுமா என்றால் அது கேள்விக் குறிதான். ஆனால், சினிமாவில் நடிகர் அரவிந்த்சாமியின் இரண்டாவது இன்னிங்ஸ் அமோகமாக இருக்கிறது.

தனி ஒருவன் திரைப்படத்தில் மிரட்டியதற்குப் பிறகு, அசைக்க முடியாத சக்தியாக மீண்டும் உருவெடுத்துள்ளார். இப்போது நரகாசூரன், செக்க சிவந்த வானம், ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன.

அடுத்ததாக, இயக்குநர் ராஜபாண்டியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில், கதாநாயகியாக ரெஜினா கெசண்ட்ரா நடிக்கிறார். இயக்குநர் ராஜபாண்டி, இதற்கு முன் என்னமோ நடக்குது, அச்சமின்றி அச்சமின்றி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக மிஸ்டர் சந்திரமௌலி திரைப்படத்தில், கௌதம் கார்த்திக்குடன் நடித்திருந்தார் ரெஜினா. அத்திரைப்படத்தில் வந்த ஏதேதோ ஆனேனே பாடலில், தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தது, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

இப்போது, அரவிந்த்சாமி ரெஜினா கெசண்ட்ரா இணைவதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இத்திரைப்படத்தில், இதுவரை பார்த்திராத வேடத்தில், கெட்டப்பில் வருகிறாராம் ரெஜினா. முதலில் யோசித்தாராம். பிறகு கதையை முழுமையாகக் கேட்டுவிட்டு, ஓகே சொன்னாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X