2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

வனிதா-ஷெரின் மீண்டும் மோதல்!

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் வீட்டில் சண்டை தவிர வேறு எதுவுமே நடக்காதா? என்று பார்வையாளர்கள் நினைக்கும் அளவுக்கு அந்த நிகழ்ச்சியின் ப்ரமோவிலும் சரி, ஒரு மணி நேர நிகழ்ச்சியிலும் சரி சண்டை தவிர வேறு எதையும் காண்பிக்கப்படுவதில்லை

இன்றைய முதல் இரண்டு ப்ரமோவில் லாஸ்லியா-சாக்சி சண்டை காட்டப்பட்ட நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரமோவில் ஷெரின் - வனிதா சண்டை காட்டப்படுகிறது. 

சேரனுக்கு உதவியாக ஷெரினை நியமனம் செய்ததாகவும், ஆனால் அவர் உதவி செய்யாமல் இருப்பது ஏன்? என்று கேளுங்கள் என்றும் சேரனிடன் வனிதா கூறுகிறார். இதனையடுத்து பதிலுக்கு ஷெரின் பேச, வழக்கம்போல் யாரையும் பேச விடாமல் வனிதா பேச மீண்டும் வனிதா-ஷெரின் மோதல் நடக்கின்றது

இது என்ன கேமா? இல்லை ஜெயிலா? 24 மணி நேரமும் வார்டன் மாதிரி அவங்க சொன்னதை செஞ்சிகிட்டே இருக்கணுமா? என்று ஷெரின் சாக்சியிடம் சொல்லி புலம்புகிறார். 

இந்த ப்ரமோவில் ஆறுதலாக ஒரே ஒரு காட்சி இருக்கின்றது. நேற்று வனிதாவால் கோபப்பட்டு இனிமேல் தர்ஷனிடம் பேசவே மாட்டேன் என்று கூறிய ஷெரின் மீண்டும் தர்ஷனிடம் சகஜமாக பேசுவது போல் ஒரு காட்சி உள்ளது. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் 10% ரொமன்ஸ், 90% சண்டை நிகழ் வாய்ப்பு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X