2020 ஜூலை 15, புதன்கிழமை

விருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சுட்டி குழந்தை நட்சத்திரம் மானஸ்வி.  

இவர் நடிகர் கொட்டாச்சி - அஞ்சலியின் மகள்.  சமீபத்தில் இவர் தர்பார் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். 

இந்நிலையில்  மானஸ்வி மலையாளத்தில் மை சாண்டா என்ற படத்தில் நடித்து உள்ளார். 

இதனால் அவருக்கு இந்தாண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது.

இந்த விருதை மானஸ்வி  தனது  தந்தையுடன் சென்று வாங்கியுள்ளார். அப்போது தந்தை மகள் இருவரும் கட்டியணைத்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக கொட்டாச்சி சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நினைத்திருந்த நிலையில் அதை மனைவி அஞ்சலியும், மகள்  மானஸ்வியும்  நிறைவேற்றிக் கொடுத்ததாக  உணர்ச்சி பொங்க  கூறியது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X