2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்

J.A. George   / 2021 ஜனவரி 18 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை ஜெயித்தார். இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவ்வும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில், விறுவிறுப்பாக நடந்த 4ஆவது சீசன் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் ஆரி வெற்றி பெற்றார். குறிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு, 16 கோடியே 50 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்ததாகவும், இரண்டாம் இடம் பிடித்த பாலாவுக்கு 6 கோடியே 14 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் கமல் தெரிவித்தார்.

இதன்மூலம் சுமார் 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரி வெற்றி பெற்றுள்ளார். பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் யாரும் வெற்றி பெற்றதில்லை என கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .