2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

அசினுக்கு மன்னிப்பு கிடையாது

A.P.Mathan   / 2010 ஜூலை 13 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தடையினை பலமுறை நடிகை அசின் மீறியுள்ளதால் அவர்மீது நிச்சயமாக தடைவிதிக்கப்படும் என நடிகர் சங்க செயலாளர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற ஐஃபா திரைப்பட விழாவினை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க பல பிரபல நடிகர்கள் இலங்கை விழாவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் சல்மான்கான் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து தனது புதிய திரைப்படமாக 'ரெடி' திரைப்படத்தின் படப்பிடிப்பினையும் இலங்கையில் நடத்தி வருகின்றார்.

'ரெடி' திரைப்படத்தில் கதாநாயகியாக அசின் நடிக்கிறார். தமிழ் திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமான அசின், நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை மதிக்காமல் இலங்கையில் படப்பிடிப்பில் கலந்துகொள்வதால் கொதிப்பில் இருக்கிறது திரையுலகு. இந்நிலையிலேயே அசினுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என நடிகர் ராதாரவி குறிப்பிட்டுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X