2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

அழகென்ற சொல்லுக்கு அமுதா

George   / 2015 ஜூலை 31 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுசீந்திரனின் உதவியாளர் நாகராஜன், அழகென்ற சொல்லுக்கு அமுதா என்ற புதிய திரைப்படத்தை இயக்குகின்றார். ரஜன் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாவதுடன் பல திரைப்படங்களில் தோழியாகவும், தங்கையாகவும் நடித்த அர்ஷிதா ஹீரோய்னாக நடிக்கிறார். 

இவர்கள் தவிர பட்டிமன்றம் ராஜா, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில்; நடிக்கிறார்கள் 'இது முற்றுமுழுதான காதல் கதை' என இயக்குநர் நாகராஜன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "ஹீரோ ரஜன் வியாசர்பாடி ரஜினி ரசிகர் மன்றத் தலைவர். மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குவது, மக்களுக்கு ரேஷன் அட்டை பிரச்சினைகளுக்கு அலைவது என சில சமூக சேவைகளையும் செய்வார். 

அவருக்கு ஜெராக்ஸ் கடையில் வேலை செய்யும் அர்ஷிதா மீது காதல். ஆனால் அவருக்கு இவரைக் கண்டாலே பிடிக்காது. ரஜன், அர்ஷிதாவின பின்னாலே போய் காதல் தொல்லை செய்ய அவர் தாதாவிடம் போய் சொல்ல தாதா ரஜினை ரவுண்டு கட்ட... அப்புறம் தாதாவே தலைதெறிக்க ஓட... இப்படி கலகல காமெடியாக செல்லும் திரைப்படம்.

அர்ஷிதா, ரஜன் கண்ணுக்கு அழகாகவே தெரிவார். அதனால் தான் அழகென்ற சொல்லுக்கு அமுதா என்று திரைப்படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறோம்' என்கிறார் நாகராஜன்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X