தமிழ் படத்தில் நடிக்கிறார் அமிதாப்..?
06-04-2012 12:40 PM
Comments - 0       Views - 974

ஆசியாவைப் பொறுத்தமட்டில் ஒரு சில சூப்பர் ஸ்டார்களே இருக்கிறார்கள். ஜக்கிசான், ரஜினி, அமிதாப் பச்சான் போன்ற முன்னணி நடிகர்களே சூப்பர் ஸ்டார்களாக, நடிப்புலகின் ஜாம்பவான்களாக இருந்து வருகிறார்கள். தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான். ஆனால் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் அநேகமானோர் அமிதாப் பச்சனைத்தான் குறிப்பிடுவார்கள்.

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்று கணிப்பினை ரசிகர்கள் வாயிலாக மேற்கொண்டது. அந்த கருத்துக் கணிப்பில் ரஜினிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருந்தது. இருப்பினும், அண்மையில் கோச்சடையான் படம் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ரஜினி - உண்மையான சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன்தான் என்று கூறியிருந்தார். இப்படி பல புகழுக்கு சொந்தக்காரரான அமிதாப்புடன் தான் வெகுவிரைவில் இணைந்து நடிக்கப்போவதாகவும் ரஜினி கூறியிருந்தார்.

இது இப்படியிருக்க, அமிதாப் பச்சனை தமிழ் படமொன்றில் எப்படியாவது நடிக்க வைத்துவிடவேண்டும் என பல இயக்குநர்கள் முயற்சித்தார்கள். அமிதாப்பின் நெருங்கிய நண்பர்களான ரஜினி, கமல் உட்பட பலர் முயற்சித்தும் அது சாத்தியப்படவில்லை. கடைசியாக எந்திரனில் அமிதாப்பை எப்படியாவது நடிக்க வைத்துவிடவேண்டும் என பலர் முயற்சித்தும் அதுவும் இறுதிநேரத்தில் கைகூடாமல் போயிருந்தது. அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதை வைத்துப் பார்த்தபோது அவருடன் இணைந்து அமிதாப் நடிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கு முன்பாக வேறு ஒரு செய்தி இப்போது வெளிவந்திருக்கிறது.

காமராஜர், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை இயக்கிய பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் நடிப்பதற்கு அமிதாப் பச்சன் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக நம்பகமான செய்திகள் வெளிவந்திருக்கிறன. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து தமிழ் படமொன்றினை பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் கதை அமிதாப் பச்சனுக்கு பிடித்துப் போய்விட்டதாம். தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்படத்தினூடாக நிறைவேறப்போகிறது என்று சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியதாக நம்பகமான செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

ஆக... பலரது எதிர்பார்ப்பும் இப்போது அமிதாப் பச்சனின் பக்கம் திரும்பியிருக்கிறது."தமிழ் படத்தில் நடிக்கிறார் அமிதாப்..?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty