2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நடிகர் சிரஞ்சீவியின் அவசிய வேண்டுகோள்

A.K.M. Ramzy   / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தத்துக்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாகவும், தானம் செய்யுங்கள் என்று சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்இந்தியாவில் கொவிட்-19 அச்சுறுத்தலால் மே 3ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொவிட்-19 தொற்று இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ரேபிட் பரிசோதனைக் 

கருவிகள் மூலமாக, கொவிட்-19 தொற்றுப் பரிசோதனை ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருப்பதால்,

ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ஏற்ற இரத்தம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தி திரையுலகப் பிரபலங்கள் பலரும்இரத்த தானம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்து ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தானாக முன்வந்து இரத்த தானம் செய்துள்ளார். மேலும்,  இரத்த தானம் தொடர்பாக வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"இந்த இக்கட்டான சூழலில், உயிர் காக்கும்  இரத்தத்துக்கு மிகப்பெரிய

பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உதவ அனைவரும் முன்வந்து  இரத்த தானம் செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள்

அருகிலுள்ள  இரத்த வங்கிக்குச் சென்றாலோ அல்லது அவர்களுக்கு போன் செய்தாலோ அவர்கள் உங்களுக்கு இரத்த தானம் செய்ய வழிகாட்டுவார்கள்.

இன்று என்னுடன் என் சகோ ஸ்ரீகாந்த், அவரது மகன் ரோஷன் ஆகியோரும்  இரத்த தானம் செய்தனர். இதற்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கொவிட்-19  இக்கு எதிராக ஒன்றிணைவோம்".இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .