2024 மே 02, வியாழக்கிழமை

நாமலுக்கு எதிரான கவர்ஸ் கோப் முடிவு

Kogilavani   / 2017 ஜூன் 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்ராஜா திபான்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான 30 மில்லியன் ரூபாய் பணச்சலவை வழக்கின் நீதவான் நீதிமன்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றம், நேற்று (22) அறிவித்தது.  

என்.ஆர்.கன்சல்டன்ஸ் நிறுவனத்தினூடாக, ஹலோ கோப்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி 45 மில்லியன் ரூபாய் பணச்சலவை செய்தனர் என்ற குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட அறுவருக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நாமல் ராஜபக்‌ஷ, இந்திக பிரபத் கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, சேனானி சமரநாயக்க ஆகிய ஐவருக்கு எதிராகவும் கவர்ஸ் கோப்ஸ் நிறுவனத்துக்கு எதிராகவுமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில், இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கவர்ஸ் கோப்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்று 30 மில்லியன் ரூபாய் பணச்சலவையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில்,தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு,மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதுடன், பிரதிவாதிகளிடம் அதிகுற்றப்பத்திரமும் கையளிக்கப்பட்டுள்ளதால், தவான் நீதிமன்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதாக, அறிவிக்கப்பட்டது.  

இந்திக பிரபத் கருணஜீவா மற்றும் இரேஷா சில்வா ஆகிய சந்தேகநபர்களுக்கு சர்வதேசப் பொலிஸாரினூடாக திறந்த பிடியாணை பிறப்பித்து உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும் கணக்கு விவரங்கள் தொடர்பில் அவர்களிடம் கோரப்படவுள்ளதாகவும் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .