2020 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை

இரட்டைக்கொலை சந்தேக நபருக்கு வலைவீச்சு

Editorial   / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடுதும்பர கஹட்டலியத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (03) இரவு தனது தந்தை, மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோரை கூரிய ஆயுதத்தால் குத்திவிட்டு சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் சந்தேக நபரின் தந்தை மற்றும் மனைவியின் தாய் ஆகியோர் உயிரிழந்துள்ளார்.

மனைவியுடனான வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்த தாக்குதால் சம்பவம் சந்தேக நபரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பிச்சென்ற சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை உடுதும்பர பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .