Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரணத் தண்டனைக் கைதியான மொஹமட் நௌபர் எனப்படும் “பொட்ட நௌபர்” பதுளை சிறைச்சாலையிலிருந்து தும்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவர் மாற்றப்பட்டுள்ளதாக, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் போகம்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல மேற்கொள்ளப்பட்ட திட்டம் கசிந்ததால், இவர் பதுளை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், பதுளை சிறைச்சாலையிலிருந்தும் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையிலேயே, நௌபர் தும்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பொட்ட நௌபர் உள்ளிட்ட இருவருக்கு 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
37 minute ago
1 hours ago