2020 ஜூன் 04, வியாழக்கிழமை

‘உயிருடன் குழந்தையை மீட்ட நாய்’

Editorial   / 2019 மே 20 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் பேன் நொங் காம் என்ற கிராமத்தில், நாயொன்று சிசுவொன்றை உயிருடன் மீட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பிங் பொங் என்ற நாயொன்று, மண்ணில் புதையுண்டு இருந்த நிலையில் காணப்பட்ட சிசுவை, குரைத்துக்கொண்டே மண்ணைத் தோண்டி மீட்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

இதனை அவதானித்த பிங் பொங்கின் உரிமையாளர், பிங் பொங் தோண்டிக்கொண்டிருந்த இடத்தில், சிசுவொன்றின் கால்கள் தெரிந்ததை கண்டு, உடனடியாக கிராமவாசிகளின் உதவியுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டிருந்த சிசுவை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த சிசு உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்குழந்தையானது பதின்ம வயது பெண்ணொருவருக்குப் பிறந்திருக்கும் நிலையில், அவரே இக்கு​ழந்தையை மண்ணில் புதைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிங் பொங்கின் உயிர் காக்கும் செயற்பாடும் உலகம் முழுவதும் பிரசித்திப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X