2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நேர்மையுடன் வாழ்ந்தால் அதைவிடச் சிறப்பு ஏது?

Editorial   / 2017 நவம்பர் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியதும், நல்ல, பெரிய பதவி கிடைத்தால்தான் வேலையை ஏற்றுக் கொள்ளவேண்டும் என நினைக்கவேயில்லை. வீட்டுச் சூழல் அப்படியிருந்தது. உடனே ​பஸ் நடத்துநர் வேலை கிடைத்தது. எல்லோரும் கண்டித்தனர். என்ன அவசரம்? நல்ல வேலை கிடைக்கும் வரை, பொறுத்திரு என்றனர்.  

இந்த வேலை பிடித்திருந்தது. மக்களுடன் தினசரி அந்நியோன்யமாகப் ப​ழகும் பாக்கியம் அந்த வேலையில் கிடைத்திருந்தது. கருமத்தை கடவுள் பணியாக எண்ணிச் செய்யப்பட்டது. 

இன்று பிள்ளைகள் எல்லோரும் நன்கு படித்து, உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். மிகவும் எளிமையாக வாழுகின்றார்கள்.  

எந்தப் பணியாக இருந்தால் என்ன, அதில் மனம் இலயித்து நேர்மையுடன் வாழ்ந்தால் அதைவிடச் சிறப்பு ஏது? நண்பரின் கதை இது. 

     வாழ்வியல் தரிசனம் 01/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .