2024 மே 08, புதன்கிழமை

ஷாரூக்கானுக்கு மரண அச்சுறுத்தல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபல பாலிவூட் நடிகர் ஷாரூக் கானுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிழல் உலக தாதாவான ரவி பூஜாரியிடம் இருந்து ஷாரூக் கானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் முதல் அவருக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும் மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் அலி மொரானி வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் 5 முறை துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இவர் ஷாருக்கானின் நெருங்கிய நண்பராவார்.

இந்நிலையிலேயே ஷாரூக்கானுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X