Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை;
வானில் அதிசய நிகழ்வாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்கு மேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானில் அதிசய நிகழ்வாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்கு மேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும். 397 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறும் இந்த நிகழ்வை வெறுங்கண்ணால் பார்க்கலாம்.
இதுதொடர்பாக சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் எஸ்.சௌந்தரராஜன் கூறியதாவது: “பூமியை ஒத்த கிரகம் என கருதப்படும் செவ்வாய்க்கோள், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் வந்தது.
அதேபோல் வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்று (திங்கட்கிழமை) பூமிக்கு அருகில் வருகின்றன. வாயு பெருங்கோள்களான சனியும், வியாழனும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சியளித்து வருகின்றன.
தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன.
சனி, வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும் என்றாலும், இதேபோன்று ஒன்றாக காட்சியளித்தது கடந்த 1623ஆம் ஆண்டு அதாவது 397 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து உள்ளது. தற்போதைய நிகழ்வுக்கு பிறகு மீண்டும் வருகிற 2080ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதிதான் வியாழன், சனி கோள்கள் ஒன்றாக தோன்றும்.
இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு மே 28ஆம் திகதி அவை அருகருகே வந்தன. ஆனால், அப்போது பகல் பொழுதில் சூரியன் அருகில் இருந்து காட்சியளித்ததால் நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை இன்று நாம் காணலாம்.
அடுத்து இந்த 2 கோள்களும் மிக நெருக்கமாக வரும் நிகழ்வு, 2040ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் திகதியும், அதற்கு பிறகு 2060ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதியும் நடக்க இருக்கின்றன.”
31 minute ago
36 minute ago
38 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
38 minute ago
42 minute ago