2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி என்ன தெரியுமா?

Editorial   / 2020 செப்டெம்பர் 09 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களின் நலனைக் காப்பதில் எப்போதுமே ஒரு படி முன்னர் தான் இருக்கிறது என்று கூறவேண்டும். 

அந்தவகையில் கூகுள் நிறுவனம் தற்போது எடுத்துள்ள முடிவு அந்நிறுவனத்தின் ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 கொரோனா தொற்று காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைசெய்ய அனுமதித்திருந்தன. 

சரியாக ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது உலகெங்கிலும் பல நாடுகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுப் பல நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. 

ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யப் பழகி இருந்தாலும், நிறுவனத்தில் சென்று வேலை செய்வதை விட வீட்டில் சற்று அதிகமான பணி கொடுக்கப்பட்டது என்றுதான் கூறவேண்டும். 

குறிப்பாக மீட்டிங், இரவு-பகல் வேலை என ஊழியர்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பது அவசியம் என்பதை உணர்ந்த கூகுள் நிறுவனம் தொழிலாளர்களுககு மூன்று நாட்கள் வாரவிடுமுறை அளித்துள்ளது.

இந்தியாவில் ஹைபர்சோனிக் ராக்கெட் சோதனை வெற்றி: பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு! அதாவது இந்த மூன்று நாட்கள் விடுமுறையில் வெள்ளிக்கிழமை திடீரென அவசர வேலை வந்துவிட்டால் வெள்ளிக்கிழமை விடுமுறையை மற்றொரு நாளில் மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வராத நிலையில் தொழிலாளர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தைப் பாதுகாப்பது அவசியம் என்றும் அதிக அழுத்தம் மன உளைச்சலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. 

பின்பு இந்நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதன் ஊழியர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது. கூகுள் நிறுவனத்தை போலவே மற்ற நிறுவனங்களும் அருமையான விடுமுறை திட்டங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .