2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கூகுள் விளம்பர தயாரிப்புகளில் பாரிய மாற்றங்கள்

Shanmugan Murugavel   / 2016 மே 24 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூகுளின் AdWords பாரிய மாற்றங்களைச் சந்திக்கிறது. அலைபேசிக்கு மேலும் பொருத்தமான முறையில் தனது விளம்பரக் கருவிகளை மாற்றும் பொருட்டு சில இற்றைப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக தேடல் இயந்திர ஜாம்பாவானான கூகுள் கடந்த செவ்வாய்க்கிழமை (24) அறிவித்துள்ளது.

மேற்படி இற்றைப்படுத்தல்களில் இடம் வாரியான அலைபேசித் தேடுதல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ள கூகுள், இவ்வகையான தேடுதல்களானது மற்றைய தேடுதல்களை விட 50 சதவீதம் வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவித்துள்ளது.

அவ்வகையில் கூகுள் இணையத்தளத்திலும் கூகுள் மப்ஸிலும் புதிய உள்ளூர் விளம்பரத் தேடுதல்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணமாக  இதில் கொத்துரொட்டிக் கடை எனத் தேடும்போது, அது எங்கு இருக்கின்றது என்பதையும் தேடுதல்களில் காட்டவுள்ளது.

இது தவிர, ”promoted pins” ஐயும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது குறிப்பிட்ட நிறுவனத்தின் இலட்சினை வரைபடத்தில் தோன்றுகையில், இலகுவாக குறிப்பிட்ட நிறுவனத்தின் கிளைகளை அடையாளங் காணமுடியும். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .