Editorial / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதலாவது மனித ரோபோ எனக் கருதப்படும் சோபியா உருவாக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்துள்ளன.
இந் நிலையில் குறித்த ரோபோவை உருவாகிய ஹன்சன் ரோபோட்டிக்ஸ் (Hanson Robotics) என்ற நிறுவனம் தற்போது சோபியாவின் தங்கையாக ஜோய்ஸ் (Joyce) என்ற புதிய மனித ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இப்புதிய ரோபோவினை ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்ட குறித்த நிறுவனமும் கனடாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான இம்மர்விஷனும் ( imervision )இணைந்து உருவாக்கியுள்ளன.
அந்தவகையில் குறித்த ரோபோவில் ultra-wide-angle panomorph என்ற கெமெரா தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு நியூரல் நெட்வொர்க் மற்றும் கணினி பார்வைக்கு தரவை வழங்க டேட்டா-இன்-பிக்சர் தொழில்நுட்பம் மற்றும் பல சென்சர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .