2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள்

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயனர்களின் பேஸ்புக் உள்நுழைவு விவரங்களைத் திருடுவதாக கூறி சைபர் பாதுகாப்பு நிறுவனமான எவினா கூகுளை எச்சரித்ததை தொடர்ந்து சுமார் 25ஆண்ட்ராய்டு ஆப்கள் அதிடி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டன. 

குறிப்பாக இப்போது அகற்றப்பட்ட இந்த 25ஆப்ஸ்களும் மார்வேர் உடன் வருகின்றன மற்றும் இவைகள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பேஸ்புக் உள்நுழைவு சார்ந்த விவரங்களைப் பயன்படுத்தும்போது அவற்றை பதிவு செய்கின்றன எனக் கூறப்பட்டுளள்து. 

இப்போது நீக்கப்பட்ட இந்த 25ஆப் பயன்பாடுகளும் சுமார் 2மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கண்டுள்ளன. குறிப்பாக இந்த 25 ஆப்களில் பெரும்பாலும் பைல் மேனேஜர், பிளாஷ் லைட், வால்பேப்பர் மேனேஜ்மென்ட், ஸ்கிரீன்ஷாட் எடிட்டர் மற்றும் வெதர் உள்ளிட்ட ஆப் வசதிகள் ஆகும். 

ஒருவேளை நீங்கள் இந்த 25 ஆப்களை பயன்படுத்தி வந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா மற்றும் கூகுள் பரிந்துரைத்துள்ளது.

நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய 25ஆப்களின் பட்டியல் இதுதான். 

1.Contour level wallpaper 
2.Iplayer & iwallpaper 
3.Wallpaper Level 
4.Super Wallpapers Flashlight 
5.Padenatef
Color Wallpapers 
7.Video maker 
8.Super Bright Flashlight 
9.Pedometer 
10. Powerful Flashlight 
11.Accurate scanning of QR code 
12.Classic card game 
13.Solitaire game 
14.Super Flashlight 
15.Daily Horoscope Wallpapers 
16.Synthetic Z 
17.Composite Z 
18.File Manager
19.Screenshot capture 
20.Wuxia Reader 
21.Junk file cleaning 
22.Anime Live Wallpape 
23.Plus Weather
24.Com.tyapp.fiction 
25.iHealth step counter


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--