Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாட்ஸ்அப், அதன் சொந்த வழியில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் என்று தான் கூறவேண்டும். உலகத்தில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் இந்த வாட்ஸ்அப் பயன்பாட்டை நீங்களும் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் தனியுரிமை பாதுகாப்பு மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு போன்றவற்றைப் பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்ன என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
வாட்ஸ்அப் பயன்பாட்டின் பில்ட்-இன் எண்டு-டு-எண்டு-என்கிரிப்ட்க்ஷன் (built-in end-to-end encryption) பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த உள்ளமைக்கப்பட்ட எண்டு-டு-எண்டு-என்கிரிப்ட்க்ஷன், உங்கள் வாட்ஸ்அப் சாட்களை பாதுகாக்கிறது. இது இயல்பாகவே அனைவரின் வாட்ஸ்அப் கணக்கிலும் எனேபிள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்டு-டு-எண்டு-என்கிரிப்ட்க்ஷன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை பெறுநரின் ஸ்மார்ட்போனில் மட்டுமே படிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பில்ட்-இன் எண்டு-டு-எண்டு-என்கிரிப்ட்க்ஷன் குறியாக்கம் உங்களின் மெசேஜ்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. அதுமட்டுமின்றி வாட்ஸ்அப் குரல் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கும் இந்த என்கிரிப்ட்க்ஷன் அம்சம் இயக்கப்பட்டுள்ளது.
1. பாதுகாப்பான சாட்டிங்கிற்கு மேனுவல் எண்டு-டு-எண்டு-என்கிரிப்ட்க்ஷன் சோதனை
எல்லா சாட்களும் வாட்ஸ்அப் எண்டு-டு-எண்டு-என்கிரிப்ட்க்ஷன் செய்யப்பட்டிருந்தாலும், சில நேரங்களில் நீங்கள் இருமுறை சரிபார்த்துக்கொள்வது நல்லது.
கிரெடிட் கார்டு எண் அல்லது தனிப்பட்ட புகைப்படங்கள் போன்ற முக்கியமான தகவல்களை நம்பகமான தொடர்புடன் பகிரும்போது நீங்கள் சோதனை செய்வது நல்லது. இதை எப்படி சோதனை செய்து பார்ப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
எப்படி செய்வது?
எண்டு-டு-எண்டு-என்கிரிப்ட்க்ஷன் குறியாக்கத்தை சரிபார்க்க, அந்த காண்டாக்ட் நபரின் சாட்டை முதலில் கிளிக் செய்யவும். நபரின் சாட் உள் சென்ற பின், அந்த நபரின் பெயரை கிளிக் செய்யவும். பின்னர் என்கிரிப்ட்க்ஷன் ஆப்ஷனை தட்டவும்.
Verify security code என்ற 40 இலக்க QR கோடு படத்தைக் காண்பீர்கள். இந்த QR கோடு விபரத்தை ஸ்கேன் செய்வதன் மூலம், உங்கள் எண்டு-டு-எண்டு-என்கிரிப்ட்க்ஷன் பாதுகாப்பாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளலாம்.
2. செக்யூரிட்டி நோட்டிபிகேஷன் ஆன் செய்யுங்கள்
புதிய போன் அல்லது லேப்டாப் போன்ற சாதனங்களில் ஏற்கனவே இருக்கும் சாட்டை அணுகும்போது, இரு போனிற்கும் புதிய பாதுகாப்புக் குறியீடு உருவாக்கப்படுகிறது. இந்த பாதுகாப்புக் குறியீடு மாறும்போது வாட்ஸ்அப் உங்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்புகிறது.
இந்த செக்யூரிட்டி நோட்டிபிகேஷன் ஆன் செய்ய, WhatsApp > Settings > Account > Security > Show security notifications சென்று டோக்கில் ஸ்விட்சை ஆன் செய்யுங்கள்.
3. எனேபிள் Two-Step Verification
ஒரு பயனர் ஒரு சேவை ஆதரிப்பிற்காக, வாட்ஸ்அப் இந்த டு- ஸ்டேப் வெரிஃபிகேஷன் முறையை அறிமுகம் செய்தது. இரண்டு அடுக்கு அங்கீகார பாதுகாப்பு முறை (2FA- two factor authentication) பயன்படுத்தப்பட்டுள்ளதால், உங்கள் தரவை வேறொருவர் அணுகளுக்கு கிடைக்காமல் பாஸ்வோர்டு மூலம் இந்த அம்சம் பாதுகாப்பாக வைக்கிறது. இதை ஆக்டிவேட் செய்ய Menu > Settings > Account > Two-step verification > Enable கிளிக் செய்யுங்கள்.
4. பின்-லாக் பாதுகாப்பு
துரதிர்ஷ்டவசமாக, வாட்ஸ்அப்பை லாக் செய்து பயன்படுத்திக்கொள்ள பாஸ்வோர்டு லாக்கிங் சேவை என்று எதுவும் வழங்கப்படவில்லை. வாட்ஸ்அப் மூன்றாம் தரப்பு பின்-லாக் செயலிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மிகவும் வெளிப்படையாகக் கூறிவிட்டது.
பிங்கர்பிரிண்ட் பாதுகாப்பு
இருப்பினும் ஆறுதலாக பிங்கர்பிரிண்ட் பாதுகாப்பு அம்சத்தை அண்மையில் அறிமுகம் செய்தது. இதை ஆக்டிவேட் செய்ய WhatsApp > Settings > Account > Privacy> Fingerprint lock> Unlock with fingerprint கிளிக் செய்து பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள்.
5. கிளவுட் பேக்கப் இனி வேண்டாம்
தனியுரிமை குறித்து உண்மையில் நீங்கள் அதிக அக்கறை கொண்டிருந்தால், உடனே கிளவுட் பேக்கப் சேவையை சுவிட்ச் ஆஃப் செய்யுங்கள். வாட்ஸ்அப், கூகிள் டிரைவ் அல்லது ஐக்ளவுடில் சாட் பேக்கப் அம்சத்தை வழங்குகிறது.
இதன் மூலம் நீங்கள் உங்களின் பழைய சாட்களை மீண்டும் மீட்டெடுக்கலாம். ஆனால் இந்த பேக்கப் அம்சம் எண்டு-டு-எண்டு-என்கிரிப்ட்க்ஷன் பாதுகாப்பு குறியாக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிளவுட் பேக்கப் அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி?
ஆகையால் உங்கள் தனியுரிமை பாதுகாப்பைப் பற்றி பெரிதும் கவலைப்பட்டால் உடனே உங்களின் கிளவுட் பேக்கப் அம்சத்தை ஆஃப் செய்துவிடுங்கள். உங்கள் சாட்டை பேக்கப் செய்யாமல் எப்படித் தடுப்பது?
ஐபோன் பயனர்கள் இதைச் செய்யுங்கள், WhatsApp > Settings > Chats > Chat Backup > Auto Backup > Off
ஆண்ட்ராய்டு பயனர்கள் இதைச் செய்யுங்கள், WhatsApp > Menu > Settings > Chats > Chat Backup > Backup to Google Drive > Never
6. பொதுவான மோசடிகளிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்
இது ஒரு இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் சேவை என்பதால், உங்களுக்கு அவ்வப்போது சில மோசடி மெசேஜ்கள் வந்து சேரும். சமூக ரீதியாக வடிவமைக்கப்பட்ட தாக்குதல்கள் மூலம் உங்கள் மெசேஜ் ஹேக் செய்யப்படும்.
அதேபோல் உங்கள் வாட்ஸ்அப் காலாவதியாகிவிட்டது, வாட்ஸ்அப் கோல்ட் அல்லது ப்ரீமியத்திற்கு மாறுங்கள் என்று ஒரு தொகையைக் கேட்கும். அதில் சிக்கிக்கொள்ளாதீர்கள், வாட்ஸ்அப் எப்பொழுதும் இலவசமாக மட்டுமே கிடைக்கும் என்பதை மறக்காதீர்கள்.
7. அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் டெஸ்க்டாப் அப் பயன்படுத்துங்கள்
உங்கள் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்த, உங்கள் போனின் வாட்ஸ்அப் கணக்கை கணினியுடன் சிங்க் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ டெஸ்க்டாப் பயன்பாட்டை மட்டும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.
போலியான ஏமாற்றுக்காரர்கள் அப்-களும் பார்ப்பதற்கு அசல் போல் இருக்கும். இதில் சிக்கி உங்கள் மெசேஜ்-ஐ ஹேக் செய்ய அனுமதிக்காதீர்கள்.
8. பிரைவசி பாதுகாப்பு
வாட்ஸ்அப் ஒன்றும் மிகவும் பாதுகாக்கப்படப் பயன்பாடல்ல, ஆனால் இது பயனர்களுக்குக் குறைந்த பட்ச கட்டுப்பாட்டையும் பாதுகாப்பையும் பிரைவசி செட்டிங்ஸ் மூலம் வழங்குகிறது.
பிரைவசி செட்டிங்ஸ் ஆக்டிவேட் செய்ய Settings > Account > Privacy செல்லுங்கள். உங்கள் லாஸ்ட் சீன், ப்ரொபைல் பிக்ச்சர், லைவ் லொகேஷன் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தலாம்.
வாட்ஸ்அப் முற்றிலும் பாதுகாப்பானது அல்ல
இந்த எல்லா அம்சங்களுடனும் கூட, வாட்ஸ்அப் முற்றிலும் பாதுகாப்பானது அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் 99 சதவீத வழக்கமான பயனர்களுக்கு, வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு நெறிமுறைகள் போதுமானதாக இருக்கிறது. பாதுகாப்பு மீறல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க நீங்கள் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்பாட்டை அப்டேட் செய்ய மறக்காதீர்கள்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago