2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Apple Watch Series 2

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 09 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பிளின் வருடாந்த ஊடகவியலாளர் மாநாட்டின் பிரதான பேசுபொருளாக iPhone அமைந்திருந்தநிலையில், iPhone அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக Apple Watch Series 2 அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

Apple Watch Series 2இல் புதிதாக Nikeகுடன் கைகோர்த்து, புதிய Nike Apple Watchஐ அறிமுகப்படுத்தியுள்ள அப்பிள், Hermes உடனும் புதிய இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apple Watch Nick+ மாதிரியானது நான்கு நிறங்களில் வரவுள்ளதுடன், அதன் விலை 369 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். இதற்கான முற்பதிவுகளை இன்று வெள்ளிக்கிழமை (09) முதல் ஆரம்பிக்க முடியும் என்பதுடன், எதிர்வரும் வெள்ளிக்க்கிழமை (16) முதல் இது சந்தைக்கு வரவுள்ளது. இதேவேளை WatchOs3 ஆனது, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) முதல் அறிமுகமாகிறது.

குறித்த Apple Watch Nick+ ஆனது புதிய dual-core processorஉடன் வருவதுடன், முதலாவது வகையை விட இரண்டு மடங்கு பிரகாசமான திரையைக் கொண்டதாக அமையவுள்ளன. இது தவிர, 50 மீற்றர்  வரையான ஆழத்தில் இதைப் பயன்படுத்தக் கூடியதாக அமைவதால், நீச்சல், நீரில் பாய்தல் போன்ற விளையாட்டுக்களில் இதைப் பயன்படுத்த முடியும். இது தவிர அதனுள்ளேயே GPSஐக் கொண்டிருப்பதால், கட்டாயம் iPhoneஐ கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இது தவிர, விளையாட்டுப் பிரியர்களுக்கான முக்கிய தகவலாக, இவ்வருட இறுதியில் போக்கிமொன் கோ ஆனது Apple Watchக்கு வருவதுடன், அருகிகிலுள்ள போக்கிமொன் கதாபாத்திரங்களையும் காண்பிக்கவுள்ளது.

இந்நிலையில், குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐபாட் பற்றி எதுவும் குறிப்பிடப்படாவிட்டாலும் ஐபாட் பிரியர்களுக்கான இனிப்பான செய்தி ஒன்றையும் அப்பிள் வழங்கியுள்ளது. அதாவது, ஐபாட் எயார் 2, ஐபாட் மினி 4 ஆகியவை 16 GBஇலிருந்து 32GB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .