2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

TADHACK

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 01 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய Telecom Application Developer Hackathon நிகழ்வான TADHACK, இம்முறையும் 30க்கு மேற்பட்ட நாடுகளில் இடம்பெறவுள்ளதோடு, போன வருடம் போன்று, இலங்கையில் இரண்டு இடங்களில், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளது.

2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வானது, எதிர்வரும், ஒக்டோபர் மாதம் 15ஆம், 16ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதில், எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி Ideation Day ஆகும். குறித்த தினத்தன்று, இந்நிகழ்வில் பங்குபற்றுவோர், பல்வேறு மட்டங்களில் உள்ளோருடன் அறிமுகமாகி இணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். குறித்த தினத்தைத் தொடர்ந்து, அணிகளைப் பதிவு செய்வதற்கான இறுதித் திகதி, எதிர்வரும் 24ஆம் திகதி ஆகும். அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 26ஆம் திகதி, இரண்டாவது MEET UP இடம்பெறவுள்ளது. இதில், பங்குபற்றும் ஒவ்வொரு அணிக்கும், இந்நிகழ்வை நடாத்தும் hSenid Mobile நிறுவனத்திலிருந்து ஒவ்வொரு நிபுணர்கள் நியமிக்கப்பட்ட அவர்களின் தயாரிப்பு மேம்படுத்தப்பட்டே இறுதி Hackathon இடம்பெறும்.

வைத்தியத்துறை, ஹொட்டல், கல்வி, நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி என நான்கு பிரதான தலைப்புகளில் இலங்கையில் இடம்பெறவுள்ள போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 1,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதுடன், உலகளாவிய ரீதியில், 42,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளன.

உலகளாவிய ரீதியில், இலங்கையிலேயே அதிக அணிகள் பங்குபற்றுகையில், கடந்த முறை, 500க்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், 150க்கு மேற்பட்ட அணிகளும், 100க்கு மேற்பட்ட கணினி நிரலி உருவாக்குநர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

உலகின் மிகப்பெரிய Telco Application Developer Ecosystem ஆக இலங்கையே இருக்கின்ற நிலையில், 8,500க்கு மேற்பட்ட செயலிகளைக் கொண்டிருப்பதோடு, 11 மில்லியன் செயலிப் பயனர்களைக் கொண்டிருப்பதோடு, மாதாந்தம் 80 மில்லியன் API callsகளைப் பெறுவதோடு, 4,300க்கு அதிகமான செயலி உருவாக்குநர்களையும் கொண்டுள்ளது.

இந்நிலையில், Telephony மற்றும் Data Commuication போன்ற Telecommunications சேவைகளை வழங்கும் Telcoகக்களால், இலகுவாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வதோடு, இலகுவாக இடஞ்சுட்டல்களை மேற்கொள்ள முடியும் என்பதோடு, USSD, SMS போன்ற சேவைகளையும் பெற முடியும்.

இவ்வாறான நிலையில், மேற்குறித்த சேவைகளுடன், IoT, WebRTC போன்ற சேவைகளைக்குமான APIகளை, TADHACKஐ நடாத்தும் hSenid Mobile நிறுவனமே வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .