2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அறிமுகமானது கூகுளின் அலைபேசி தயாரிப்பான Pixel

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூகுளின் அலைபேசியான Pixel, சான் பிரான்சிஸ்கோவில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற கூகுளின் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, Pixel ஆனது இரண்டு அளவுகளில் வெளியாகியிருந்தது. ஒன்று, ஐந்து அங்குலம் அளவானதாகவும், மற்றையது, 5.5 அங்குலம் அளவானதாகவும் இருந்தது. இதேவேளை, குறித்த இரண்டு அலைபேசிகளும் Gorillaa Glass 4-உடனேயே வரவுள்ளது.

Pixel-இன் பின்புறமானது, கண்ணாடி, உலோகத்தின் கலவையாக அமைந்துள்ளதுடன், மையத்தில், கைரேகை வாசிப்பானையும் கொண்டுள்ளது. தவிர, அடியே, உணரி ஒன்றுடன் கூகுளின் புதிய “G” இலட்சினை அமையவுள்ளது.

அடுத்து, தற்போது அலைபேசி என்றவுடனே, முதலாவதாக நோக்கப்படும் கமெராவை நோக்கினால், Pixelஐ அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கூறப்பட்டது போன்று, ஏனைய அலைபேசிகளில் காணப்படுவது போல கமெராவானது, முன்தள்ளியதாக இல்லை.

இது தவிர, Pixel-இன் கமெராவானது, DXOMark தரப்படுத்தலில், அபாரமாக 89 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதையே, தாம் தயாரித்த திறன்பேசிக் கமெராக்களில் சிறந்தது இதுவென்பது மட்டுமல்லாமல், எப்போது தயாரிக்கப்பட்டதில், சிறந்த திறன்பேசிக் கமெரா இதுவென கூகுள் தெரிவித்திருந்தது.

Pixel-இன் பின்புறக் கமெராவானது, 12.3 megapixels என்பதுடன், முன்புறக் கமெரா, 8 megapixels ஆகும். மங்கலான ஒளியிலும் கமேரா சிறப்பாக செயற்படுவதற்கு, குறித்த கமெராவின் 1.55 micron pixels உதவுவதுடன், விரைவாக சில புகைப்படங்களை எடுக்கும் பொருட்டு Smartburst modeஐயும் கொண்டுள்ளது. இது தவிர, 4K காணொளியை 30FPSஇல் எடுக்க முடியும் என்பதுடன், கலங்கமுடியாத காணொளிகளை எடுக்கக் கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது.

இதேவேளை, உங்கள் புகைப்படங்கள், காணொளிகளை, நீங்கள் எடுத்த அதேயளவிலேயே சேமித்து வைப்பதற்கு, எல்லையற்ற cloud நினைவகத்தை, கூகுள் வழங்குகிறது.

Pixel ஆனது quad-core Snapdragon 821 processorஐக் கொண்டிருப்பதுடன், 4GB RAMஐயும் 2770mAh மின்கலத்தையும் கொண்டிருக்கின்றது. குறித்த மின்கலத்தை, 15 நிமிடங்கள் மின்னேற்றுவதன் மூலம், ஏழு மணித்தியாலங்களுக்கு தேவையான மின்னைப் பெறமுடியும். தவிர, ஒரு முறை மின்னேற்றும்போது, 13 மணித்தியாலங்கள் வரை அலைபேசியைப் பாவிக்க முடியும்.

32GB, 128GB என இரண்டு வகையான நினைவகத்தில் Pixel கிடைக்கின்றது. Pixel-இன் அடியில் USB-C port காணப்படுவதுடன், தலைப்பன்னியைச் செருகுவதற்கான குதையையும் கொண்டுள்ளது.

இந்நிலையில், Pixel-உடனேயே, முதன்முதலாக Google Assistant வரவுள்ளதுடன், கூகுளின் புதிய தகவல் பரிமாற்றச் செயலியான Duo, Allo ஆகியவை நிறுவப்பட்டே வருகிறது. தவிர, அன்ட்ரொயிட்டின் புதிய பதிப்பான Nougat உடனேயே Pixel வரவுள்ளது.

Very Silver, Quite Black, மட்டுப்படுத்தப்பட்ட பதிப்பான Really Blue ஆகிய மூன்று நிறங்களில் வரவுள்ளதுடன், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில், தற்போதே முற்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை (03) முதல், இந்தியாவில், முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை Pixel-இன் விலை 649 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .